எனது தந்தையை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்குவேன்! சபதமிடும் பின்லேடனின் மகன்!

0
301

10844
எனது தந்தையை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகன் சபதமிடும் ஓடியோ வெளியாகியுள்ளது.

அல்கொய்தா இயக்கத் தலைவனான ஒசாமா பின்லேடனை, கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தான் அபோதாபாத்தில் வைத்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில் இவரது மகனான ஹம்சா பின்லேடன் சபதமிடும் ஓடியோ பதிவு வெளியாகியுள்ளது.

அதில், நாங்கள் அனைவருமே ஒசாமா தான், உங்களையும்(அமெரிக்கா), உங்கள் சித்தாந்தத்தை ஏற்க மறுக்கும் நாடுகள் மீது நீங்கள் செலுத்திவரும் அடக்குமுறைக்காகவும் பழிக்கு பழி வாங்குவேன்.

இது ஒசாமா பின்லேடன் என்ற தனிமனிதருக்காக மட்டுமல்ல, இஸ்லாமுக்காக உயிர்நீத்த அனைவரின் சார்பாகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here