என்னைக் குறித்து நான் முடிவெடுத்தது தவறு:வைகோ!

0
157

vaiko-cud-600சட்­ட­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டா­தது உள்­ளிட்ட பல்­வேறு விவ­கா­ரங்­களில் தாம் தவறு செய்­தி­ருப்­ப­தாக ம.தி.­மு.க பொதுச்­செ­ய­லாளர் வைகோ உருக்­க­மாக தெரி­வித்­துள்ளார்.
கோவையில் நடை­பெற்ற ம.தி.­மு.க செயல்­வீ­ரர்கள் கூட்­டத்தில் பேசிய வைகோ, எனக்கு அர­சியல் வாழ்வை மக்கள் தான் கொடுத்­தார்கள். மக்கள் இல்லை என்றால் 1993இல் என் அர­சியல் வாழ்வு அழிந்து போயி­ருக்கும். என்­னி­டத்தில் என்ன குறைகள் என அமை­தி­யாக யோசிக்­கும்­போது, அவற்றை நான் உணர்­கிறேன். அதற்கு என்ன காரணம் என்­ப­தையும் நான் அறி­கிறேன் என மனம் திறந்து உருக்­க­மாக பேசி­யுள்ளார்.
மேலும் பேசிய அவர், கட்சி முன்­னேற வேண்டும் என்­பதைத் தவிர எந்த சிந்­த­னையும் எனக்கு கிடை­யாது. நம் குறை­களை சுட்­டிக்­காட்டி பெரி­து­ப­டுத்­திய பத்­தி­ரி­கை­களோ, ஊட­கங்­களோ, ஊர் ஊராக வெயிலில், மழையில் நடந்து, உடல் நலி­வுற்று ரோட்டின் ஓரத்தில் கட்­டாந்­த­ரையில் துண்டை விரித்துப் படுத்துக் கிடந்­ததை நினைத்து பார்க்கக் கூட­வில்லை.
ஒன்றே முக்கால் ஆண்டு சிறையில் இருந்­த­போது நான் கவ­ன­மாக இருந்தேன். மக்கள் தலை குனிந்­து­விடக் கூடாது என்­ப­தற்­காக மிகக் கவ­ன­மாக இருந்து வந்தேன். பிணை­யில்­கூட வராமல் இருந்­தது மக்­களின் தலை குனிந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்தான். அப்­படி எல்லாம் கவ­ன­மாக இருந்தும் இந்த முறை என் மீது பழிச்சொல் வந்­தி­ருக்­கி­றது.
அ.தி.மு.க.விடம் இருந்து 1,500 கோடி வைகோ வாங்­கி­யி­ருக்­கிறார் எனச் சொல்­லும்­போது, அக்­கி­ர­ம­மாக போட்­டி­ருக்­கி­றார்கள் என அலட்­சி­யப்­ப­டுத்தி விட்டேன். அதைப் பொருட்­ப­டுத்த ஆரம்­பித்தால் அது மிகப்­பெ­ரிய செய்­தி­யாகும் என மன­த­ளவில் நினைத்து அதை தவிர்த்தேன். இதற்கு நான் முக்­கி­யத்­துவம் கொடுத்து பதி­ல­ளித்தால், கேள்­விதான் தொலைக்­காட்சி பார்­வை­யா­ளர்கள் மனதில் பதியும். பதில் நிற்­காது என எண்­ணினேன்.
அடுத்து என்னைப் பற்றி முடி­வெ­டுக்கும் பிரச்சி­னையில், நானாக யாரையும் ஆலோ­சிக்­காமல் முடி­வெ­டுத்­தது ஒரு தவறு தான். நான் போட்­டி­யிட மாட்டேன் என்ற செய்­தியை நானாக எடுத்திருக்க கூடாது. என்னைக் குறித்து நான் முடிவெடுக்கும்போது அது தவறாக முடிகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here