இன்றுவரை 43 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் !

0
1387

imageஇலங்­கையில் இன்று வரை 43 ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொ­லை­செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில் 35 தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் 5 சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­களும் 3 முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் அடங்­கு­கின்­றனர் என மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.
நேற்று புதன்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் பொலிஸ்மா அதி­ப­ருக்கும், ஊடக அமைச்­சுக்கும், வழங்­கி­யுள்ள மக­ஜரில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் ஐ.நடே­சனின் 12ஆவது நினைவு தினத்­தினை முன்­னிட்டு மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றி­யத்­தினால் மட்­டக்­க­ளப்பு காந்தி பூங்கா முன்­றலில் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று காலை 9.00 மணி­ய­ளவில் நடை­பெற்­றது.
நடே­சனின் படு­கொலை விசா­ர­ணையை மீள ஆரம்­பிக்­க­ கோ­ரியும் கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தக்­கோ­ரியும் ஊடக சுதந்­தி­ரத்­தினை வலி­யு­றுத்­தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
இந்த கவன ஈர்ப்பு போராட்­டத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள், பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், அர­சியல் பிர­தி­நி­திகள், சிவில் சமூக பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.image

2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடே­சன், தனது வீட்­டி­லி­ருந்து உந்துருளியில் அலு­வ­ல­கத்­திற்குச் சென்று கொண்­டி­ருந்த வேளை மட்­டக்­க­ளப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்­டுக்­கொல்­லப்­பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்­கையில் இன்று வரை 43 ஊட­க­வி­ய­லா­ளர்கள் படு­கொ­லை­செய்­யப்­பட்­டுள்­ளனர். இதில் 35 தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் 5 சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­களும் 3 முஸ்லிம் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் அடங்­கு­கின்­றனர் என மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றியம் தெரி­வித்­துள்­ளது.
நேற்று புதன்­கி­ழமை மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் பொலிஸ்மா அதி­ப­ருக்கும், ஊடக அமைச்­சுக்கும், வழங்­கி­யுள்ள மக­ஜரில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
படு­கொலை செய்­யப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் ஐ.நடே­சனின் 12ஆவது நினைவு தினத்­தினை முன்­னிட்டு மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றி­யத்­தினால் மட்­டக்­க­ளப்பு காந்தி பூங்கா முன்­றலில் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று காலை 9.00 மணி­ய­ளவில் நடை­பெற்­றது.
நடே­சனின் படு­கொலை விசா­ர­ணையை மீள ஆரம்­பிக்­க­ கோ­ரியும் கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களின் விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­தக்­கோ­ரியும் ஊடக சுதந்­தி­ரத்­தினை வலி­யு­றுத்­தியும் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.
இந்த கவன ஈர்ப்பு போராட்­டத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள், பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், அர­சியல் பிர­தி­நி­திகள், சிவில் சமூக பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.
2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடே­சன், தனது வீட்­டி­லி­ருந்து மோட்டார் சைக்­கிளில் அலு­வ­ல­கத்­திற்குச் சென்று கொண்­டி­ருந்த வேளை மட்­

மக­ஜரில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­த­னவின் ஆட்­சிக்­கா­லத்தில் 01 ஊட­க­வி­ய­லா­ளரும் ரண­சிங்க பிரே­ம­தா­சவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2 ஊட­க­வி­ய­லா­ளர்­களும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சிக்­கா­லத்தில் 13 ஊட­க­வி­ய­லா­ளர்­களும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் 26 ஊட­க­வி­ய­லா­ளர்­களும் படு­கொ­லை­செய்­யப்­பட்­டுள்­ளனர்.
1985ஆம் ஆண்டு தொடங்­கிய தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொ­லைகள் 2010ஆம் ஆண்­டு­வரை தொடர்ந்­து­கொண்டே இருந்­தன.
இந்­நி­லையில் இலங்­கையில் நடை­பெற்­று­வந்த கடந்­த­கால ஆட்­சியை ஊட­கத்­து­றையின் பெரும்­பங்­குடன் முடி­வுக்கு கொண்­டு­வந்த நல்­லாட்சி அர­சாங்கம், இன்று இரண்டு சிங்­கள ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொலை குறித்த விசா­ர­ணை­க­ளையே ஆரம்­பித்­துள்­ளது.
ஆனால் இந்­நாட்டில் பெருந்­தொ­கை­யாக கொல்­லப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் விசா­ர­ணை­களை இன்­று­வரை ஆரம்­பிக்­க­வில்லை.
மட்­டக்­க­ளப்பில் சுட்­டுக்­கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளரும் மனி­த­வு­ரிமை செயற்­பாட்­டா­ள­ரு­மான ஐயாத்­துரை நடே­சனின் 12ஆவது ஆண்டு நினைவு நாளினை முன்­னிட்டு மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் இன்­றைய தினம் கவ­ன­ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்­து­கின்றோம்.
இந்த போராட்­டத்தின் ஊடாக நாங்கள் இந்த நாட்டின் நல்­லாட்சி அர­சுக்கும் புதி­தாக ெதரிவு­செய்­யப்­பட்ட பொலிஸ்மா அதி­ப­ருக்கும் ஊட­கத்­துறை அமைச்­சுக்கும் பின்­வரும் கோரிக்­கை­களை முன்­வைக்­கின்றோம்.
1. சுட்­டுக்­கொல்­லப்­பட்ட தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் உள்­ளிட்ட அனைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­களின் படு­கொ­லைக்­கான விசா­ர­ணை­களை மிக விரை­வாக ஆரம்­பிக்­க ­வேண்டும்.
2. இலங்­கையில் இன்­று­வரை சுட்­டுக்­கொல்­லப்­பட்ட, காணா­மல்­போன ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர் விப­ரங்­களை அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளியிட வேண்டும்.
3. நல்­லாட்­சி­யிலும் தொடரும் மறை­மு­க­மான ஊடக அடக்­கு­மு­றையை தடுத்து நிறுத்தி ஊடகசுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
4. நடேசனின் படுகொலை விசாரணையை மட்டக்களப்பில் ஆரம்பிக்கவேண்டும்.
மேற்குறித்த எமது கோரிக்கைகளை ஏற்று மிகவிரைவாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
மேற்­படி எமது கோரிக்­கைகள் நிரா­க­ரிக்­கப்­படும் சந்­தர்ப்­பத்தில் இந்த நாட்டில் உள்ள அனைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­களும் தொடர்ந்தும் போராட்­டத்தில் ஈடு­ப­ட­வேண்­டிய நிலைக்­கு­தள்­ளப்­ப­டுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here