ஊடகவியலாளர் பலர் கொல்லப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் -சம்பந்தன்

0
449

sam newஎமது நாட்டில் கடந்த காலங்களின் போது ஊடக நிறுவனங்கள் பல தாக்கப்பட்டும், ஊடகவியலாளர் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இது குறித்தான குற்றங்களுக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும். எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி வந்து இதுவரையிலான காலப்பகுதியில் எவ்வித காத்திரமான நடவடிக்கைகளோ விசாரணைளோ முன்னெடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் குற்றம் சுமத்தினார்.

பல்லின மக்கள் வாழும் நாட்டில் இலங்கை  எமது தேசம்  என்ற அடிப்படையில் அனைவரும் வாழும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.  அரசியலமைப்பிற்கான ஏற்பாடுகளின் போது ஊடங்களின் பங்களிப்பு மிகவும் அத்தியவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச பத்திரிகை தினத்தை முன்னிட்டு லக்ஷமன் கதிர்காமர் மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here