
இச் சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் யாழ்.செம்மணி வீதி சுடலைக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
இதில் அண்மையில் லண்ட னிலிருந்து யாழ்வந்த தச்சன்தோப்பினைச் சேர்ந்த பொன்னம்பலம் நந்தகுமார் (வயது 48) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்கானவராவார்.
இடது காலில் ஆழமான காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.