மாதகலில் 40 இலட்சம் ரூபா தங்கத்தினை கடத்த முற்பட்ட இருவர் கைது!

0
246

Gold-Coin-01a-770x472சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தினை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட இருவர் யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்கள்போல் செயற்பட்டு, மீன்பிடி உபகரணங்களுடன் படகில் கொண்டுசெல்லப்பட்ட 6.94 கிலோகிராம் தங்கம் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் கைப்பற்றப்பட்ட தங்கம் ஆகியன யாழ். சுங்கத்திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here