வீட்டிலிருந்தவர்களை தாக்கி நகை, பணம் கொள்ளை : மூவர் வைத்தியசாலையில் அனுமதி!

0
147

robberyமன்னார் பெரியகமம் பகுதியிலுள்ள வீடொன்றில் கூரையை பிரித்து உட்புகுந்த திருடர்கள்  உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான மூவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிலொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுத்தூர் கிராமசேவகர் பகுதியில் அமைந்துள்ள பெரியகமம் என்னும் இடத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.<%