வடக்கில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்க அரசாங்கம் கங்கணம் ;விக்கினேஸ்வரன் சாடல்!

0
590
vikiவடமாகாணத்தில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்க வேண்டுமென்று அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பொதுநூலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற 2016-2018 காலப்பகுதியில் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் தன்னிறைவு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்;ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடகிழக்கு மாகாணங்கள் நாட்டின் உணவு உற்பத்தியில் 60சதவீதத்தை தாமே பொறுப்பேற்று உற்பத்தி செய்தார்கள். மீண்டும் அந்த நிலை உருவாக வேண்டும். யாழ்.நகர மக்களிடையே வீட்டு இயற்கை பயிர்செய்கையை செல்வாக்கு பெற வைக்க வேண்டும். நீரில், பயிரில் சுழலில் நச்சுத்தன்மை போன்றவற்றால் நாம்  பலவிதங்களில்
பாதிப்படைகின்றோம். இவ்வாறான சூழலை மாற்றி அமைக்க வேண்டும்.
அனலைதீவு போன்ற காணிகள் பயிரிடப்படாமல் இருக்கிறது. குறித்த காணிகளின் சொந்தக்காரர்கள் வெளிநாட்டில் இருக்கின்றனர். அரசாங்கம் உபயோகிக்கப்படாமல் இருக்கும் இடங்களை கையேற்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாறு உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை விவசாய அமைச்சு கையேற்று பயிர் செய்து பலனை எடுத்துக் கொண்டு வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை  அவர்களுக்கு வழங்கலாம்  என நான் நினைக்கிறேன். அவ்வாறு செய்தால் வடமாகாணத்தில் இளம் விவசாய படையையும் உருவாக்க முடியும்  என்று நம்புகிறேன்.
இதேவேளை திருநெல்வெலி சந்தையில் இராணுவம் தமது மரக்கறி, பழங்களை விற்பனை செய்வதால் மக்கள் பாதிப்படைவதாக நான் முன்னைய வடமாகாண இராணுவத் தளபதி உதயபெரேராவிடம் முறையிட்ட பொழுது உடனே அதனை நிறுத்தி அவர் என்ன செய்தார் தெரியுமா? இயக்கச்சி ஏ-9வீதியில் விற்பனை நிலையங்களை அமைத்து மரக்கறிகளை பைகளில் இட்டு ஒரு பைகளை இவ்வளவு என்று ஏ-9 வீதியால் போய் வருவோரிடம் விற்க ஏற்பாடுகள் செய்தார். இதனால் குறித்த வீதியால் பயணிப்போர் அந்த மரக்கறிகளை தாமதமின்றி இலகுவாக வாங்கிச் சென்றனர்.
மேலும் காகில்ஸ் போன்ற நிறுவனங்கள் குளிரூட்டப்பட்ட சூழலில்  மரக்கறிகளை பாதுகாத்து விற்கின்றனர். அதேபோன்று நாங்களும் மாகாணக் குளிர் அறைகளை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here