
பிரான்சு Choisy le roi நகரத்தில் கடந்த 15.05.2025 புதன்கிழமை பிற்பகல் 14.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு Choisy le roi நகர மண்டப முன்றிலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்
Mr Tonino Panetta
Maire de Choisy le roi
சுவசி லு றுவா நகர முதல்வர்

Mme Sushma Ostermeyer
சுவசி லு றுவா உப நகர முதல்வர்
Culture – Patrimoine historique – Mémoire – Anciens Combattants – Droits de l’Homme
(கலாச்சாரம் – வரலாற்று பாரம்பரியம் – நினைவகம் – படைவீரர்கள் – மனித உரிமைகள்)
மற்றும் சுவாசி லு றூவா பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள், சுவாசி லு றூவா தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் பங்கு கொண்டு சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் செய்தனர்.
Choisy le roi நகர பிதாவும் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செய்து உரை நிகழ்த்தியிருந்தார்.
அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார்.

சுவாசி லு றூவா தமிழ்ச்சோலை மாணவர்களும் கலந்துகொண்டு, மே18 நினைவேந்தல் நிகழ்வில் தம்மைப் போன்ற இளையோரை கலந்துகொள்ளுமாறு பிரெஞ்சு மொழியில் கேட்டுக்கொண்டனர்.

அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
பிற்பகல் 17.00 மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.








