
கனடாவில் நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஒன்டாரியோ ஸ்காபுரோ பகுதியை சேர்ந்த 19 வயதான ரதுஷன் ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதன்போது படகில் இருந்த இருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்ததாகவும் ஒருவர் நீரில் விழுந்து மூழ்கியதாக சந்தேகப்பட்டதாகவும் அவசர உதவி குழுவினர் தெரிவித்தனர்.
நீருக்கடியில் தேடிய மீட்பு பிரிவினர் சடலம் ஒன்றை கண்டுபிடித்த நிலையில், அது படகின் மூன்றாவது இளைஞன் என்பதை உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்தின் போது உயிரிழந்த இளைஞன் உயிர்க்காப்பு அங்கி (life jacket) அணிந்திருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.