பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெற்ற ஆனந்தபுர நாயகர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
52

ஆனந்தபுர நாயகர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் இன்று (04.05.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர் ஏற்றிவைக்க மாவீரர் பொதுப்படத்திற்கு
கிளிநொச்சியில் OI.02.1998 அன்று வீரச்சாவடைந்த வீரவேங்கை வேணியின் சகோதரி அவர்களும். பிரிகேடியர் ஆதவனின் திருவுருவப் படத்துக்கு ஆனந்தபுரச் சமரில் 25.03.2009 அன்று வீரச்சாவடைந்த லெப்டினன்ட் கனாகதிரின் தாயார் அவர்களும். பிரிகேடியர் மணிவண்ணனின் திருவுருவப் படத்துக்கு காங்கேசன்துறையில் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட சமரின்போது II.06.1990 அன்று வீரச்சாவடைந்த மேஜர் விவேகனின் சகோதரி அவர்களும் பிரிகேடியர் விதுசாவின் திருவுருவப் படத்துக்கு ஆனந்தபுரச் சமரில் 04.02.2009 அன்று வீரச்சாவடைந்த மேஜர் கிருபனின் சகோதரி அவர்களும் பிரிகேடியர் தீபனின் திருவுருவப் படத்துக்கு மூன்று முறிப்பு நேரடி மோதலில் 22.07.1998 அன்று வீரச்சாவடைந்த 2ஆம் லெப்.கரிகாலனின் சகோதரன் அவர்களும் பிரிகேடியர் துர்க்காவின் திருவுருவப் படத்துக்கு வில்பத்துக் காட்டில் காயமடைந்து 14.05.1985 அன்று வீரச்சாவடைந்த லெப். பிரசன்னாவின் சகோதரன் அவர்களும் கேணல் நரேசின் திருவுருவப் படத்துக்கு புல்லாவெளியில் நடந்த நேரடி மோதலில் 03.08.1991 அன்று வீரச்சாவடைந்த வீரவேங்கை சுபத்திராவின் சகோதரன் அவர்களும் கேணல் தமிழ்ச் செல்வியின் திருவுருவப் படத்துக்கு முல்லைத்தீவு சிராட்டி குளப்பகுதியில் நடந்த மோதலில் 26.10.2008 அன்று வீரச்சாவடைந்த மேஜர் ஜெயசீலன் அவர்களின் சகோதரனும் கேணல் அமுதாவின் திருவுருவப் படத்துக்கு யாழ்தேவி முறியடிப்புச் சமரில் 29.09.1993 அன்று வீரச்சாவடைந்த மேஜர் சுகன்யாவின் சகோதரன் அவர்களும் சுடர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் சுடரேற்றி, மலர் வணக்கம் செலுத்தினார்கள். அரங்க நிகழ்வுகளாக மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் : – ஆனந்புரத்தின் வீரவரலாறு தொடர்பான பேச்சுக்கள், கவிதைகள், தமிழ்ச் சோலை மாணவிகளின் எழுச்சி நடனங்கள் என்பன இடம்பெற்றன. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடனும் ”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here