
கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது
மாணவர் ஒருவர் கரியாலை
நாகபடுவான் குளத்தில் மூழ்கி
உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம்
(03.05.2025) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஜெயபுரம் தெற்கினை வசிப்பிடமாக்
கொண்ட மலர்வண்ணன் விதுசன்
எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்..
தற்போது, உயிரிழந்த மாணவனின்
சடலம், கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம்
தொடர்பான மேலதிக
விசாரணைகளை காவல்துறையினர்
மேற்கொண்டு வருகின்றனர்.