தென்னிலங்கையில் தொடரும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் இன்றும் ஒருவர் பலி!

0
49

கொட்டாஞ்சேனையில் உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட T-56 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் மற்றும் நடந்துகொண்டிருக்கும் குற்றச் செயல்களுடன் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here