போலந்தின் கிராகோவ் நகர மைய சதுக்கத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!

0
14

போலந்து நாட்டின் கிராகோவ் நகர மைய சதுக்கத்தில் இன்று 07.11.2026 சனிக்கிழமை மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்; 10-இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிராகோவ் நகரின் முக்கியச் சதுக்கப் பகுதிக்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றில் இருந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார். ஸ்லாவ்கோவ்ஸ்கா வீதி அருகே பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலந்து காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது பதில் தாக்குதல் நடத்தி அவரை வீழ்த்தினர். இதில் காயமடைந்த குற்றவாளி காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் குறித்துப் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வெளியிட்டுள்ள செய்தியில், உள்துறை அமைச்சகத்திடமிருந்து அவ்வப்போது நிலவரங்களைக் கேட்டுப் பெற்று வருவதாகவும், இந்தத் தாக்குதலின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். நகரில் அவசர நிலைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரத் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

போலந்துக்கான அமெரிக்கத் தூதர் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளதாவது: “வரலாற்று சிறப்புமிக்க கிராகோவ் நகர மையத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்த கொலைவெறித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் துயரமான வேளையில் போலந்து நாட்டு மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here