பிரான்சில் தொடங்கிய மாணவர் போராட்டம் டென்மார்க் மற்றும் கிரிஸ்வரை பரவல்!

0
6

(படம்: Ida Marie Odgaard / RITZAU SCANPIX / AFP)

பிரான்சில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளன.

டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் (Copenhagen) ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காப்புச் செலவுகளுக்காக மாணவர் படித்தொகையைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அவர்கள் ஆர்ப்பரித்தனர்.

மாணவர் மானியக் கட்டமைப்பைப் பாதுகாக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

பெற்றோருடன் வசிக்கும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் சுமார் 104,000 டாலருக்குமேல் சம்பாதிக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் வழங்கப்படும் படித்தொகையை முற்றிலும் நிறுத்திவிட அரசாங்கம் திட்டமிடுகிறது.

சுமார் 14,000 மாணவர்கள் படித்தொகையை இழப்பர். 8,000 மாணவர்களின் படித்தொகை குறைக்கப்படும்.
மாணவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே கிரீஸ் நாட்டிலும் கூடுதலான கவ்வி உதவிநிதிக்கும் வசதிகளுக்கும் கோரிக்கை விடுத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here