அமெரிக்காவின் புளோரிடாவில் “லியர்ஜெட் 60” ரக தனியார் விமானம் விபத்து: அதில் பயணித்த 9 பேரும் பலி!

0
11

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், பாம் பீச் அருகே லியர்ஜெட் 60 (Learjet 60) ரக தனியார் விமானமொன்று விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த N722BD எனும் பதிவு இலக்கத்தைக் கொண்ட விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Flightradar24 வெளியிட்ட ADS-B தரவுகளின்படி, விமானம் திடீரென வலதுபுறமாகச் சாய்ந்து வேகமாகக் கீழிறங்கியுள்ளது. இதன்போது அதன் அதிகபட்ச செங்குத்து இறங்கு வேகம் நிமிடத்திற்கு 32,000 அடிக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. விமானத்தின் கடைசியாகப் பதிவான உயரம் 8,750 அடியாகும்.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.37 மணிக்கு ஆஸ்டினிலிருந்து புறப்பட்ட விமானம், 41,000 அடி உயரத்தை எட்டிய பின்னர் புளோரிடாவின் நேபிள்ஸ் பகுதிக்கு அருகே எதிர்பாராத விதமாகக் கீழிறங்கத் தொடங்கியுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள ஏனைய விவரங்கள் இதுவரை தெளிவாகத் தெரியவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here