பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சிப்பட்டறை!

0
11

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சிப்பட்டறை நேற்று ( 25.10.2026) ஞாயிற்றுக்கிழமை காலை கொலம்பஸ் பிரதேசத்தில் காலை 9.31. மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை கீதம் இசைத்தலோடு ஆரம்பமாகியது.

வளர்தமிழ் 6 முதல் வளர்தமிழ் 12 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

கடந்த முறை மழலையர் நிலை தொடங்கி வளர்தமிழ் 5 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது..

அதேவேளை, குழுச் செயற்பாட்டில் கலந்துகொண்ட அனைத்து ஆசிரியர்களும் பாடத்திட்டம், பாடநூல் மற்றும் துணைக்கருவிகளின் உதவியுடன் கற்பித்தல் செயற்பாட்டைத் திறம்பட வெளிப்படுத்தி ஆச்சரியமூட்டியிருந்தனர்

“இளம்பருவ மாணவர்களின் உளவியலைப் புரிதலும் ஆளுமை வளர்ச்சிக்கு வழிகாட்டலும்” என்ற தலைப்பில் டென்மார்க்கிலிருந்து வருகை தந்த உளவியல் மதியுரைஞர் வீரபாகு சிறீ கதிர்காமநாதன் சிறப்பாகத் தனது பயிற்சியை மேற்கொண்டிருந்தார்.

ஆசிரியர்கள் தமது சந்தேகங்களை கேள்விகளாக வழங்கி மேலும் புதிய விடயங்களை அவரிடம் இருந்து பெற்றுத் தெளிந்தார்.

வழமை போன்று கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு, தேநீர், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டிருந்தன.

குறித்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் பட்டறையூடாகத் தாம்பெற்ற தமது பட்டறிவுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்தத் தவறவில்லை.

நிறைவாக மாலை 16.30 மணியளவில் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்தோடு பட்டறை இனிதே நிறைவடைந்தது.

( பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செய்திப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here