
சுவிசில் வலே பகுதியில் அமைந்துள்ள வலே தமிழ்ச்சங்க வாணிவிழா இன்று 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு சியோன் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது.

அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வலே தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.

நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டதுடன் கலந்துகொண்டோருக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வலே தமிழ்ச்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள், வலே தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(எரிமலை செய்திப் பிரிவு)










(படங்கள்: வினுயன்)


