தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தொடர்பாக மாவீரர் பணிமனை பிரான்சு விடுக்கும் அறிவித்தல்!

0
22

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தொடர்பாக மாவீரர் பணிமனை பிரான்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழுவிவரம் வருமாறு:-

மாவீரர் திருவுருவப்படம் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக…..

புதிதாக வீரவணக்க நிகழ்வுசெய்யப்பட்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் (த.ஒ.குழுவால் வணக்கத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவை தவிர்ந்த) மாவீரர்நாளில் வணக்கத்திற்கு வைப்பதற்காக கொண்டுவரப்படும்போது மாவீரர் திருவுருவப் படத்தோடு கீழ்வரும் ஆவணங்களை தவறாது ஒப்படைக்கும்படி தாழ்மையாக கேட்டுக் கொள்கிறோம்.

  1. மாவீரரின் வீரச்சாவை உறுதிப்படுத்தும் ஆவணம்.
  2. மாவீரரின் குடும்ப உறுப்பினரின் நிகழ்வுக்கான அனுமதி ஆவணம்.
  3. மாவீரரின் வரலாற்று ஆவணம்.

இந்த ஆவணங்களுடன் ஒப்படைக்கப்படும் மாவீரர் திருவுருவப் படம் மாவீரர் நாள் மண்டபத்தில் வணக்கத்திற்கு வைக்கப்படும். படத்தையும், ஆவணங்களையும் முற்கூட்டியே மாவீரர் பணிமனையில் ஒப்படைத்து எங்கள் பணிகளை இலகு படுத்துங்கள்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

நன்றி

மாவீரர் பணிமனை பிரான்சு

தொடர்புகளுக்கு::

மாவீரர் பணிமனை பிரான்சு 07 82 54 80 90

மேலதிக தொடர்புகளுக்கு::

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு 01 48 22 01 75

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here