வடக்கில் தொடர்ந்து இருக்கும் நோக்கில் செயற்படுகிறது சிறீலங்கா இராணுவம்!

0
223

வடக்கில் ஆக்கிரமித்திருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் குறித்து வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் சர்வதேச ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த வடக்கு முதல்வர், கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொடூரமாகக் கொன்றுகுவித்தும், பெண்கள் மீது பாலியல் வற்புணர்வு மேற்கொண்டும் , சித்திரவதை செய்தும் அரக்கர்களாக மக்கள் மனங்களில் நிலை கொண்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் தற்போது பொது மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளனர் என்றும், இதன் மூலம் அவர்கள் நிரந்தரமாக வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டிருப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
சிறீலங்கா இராணுவத்தினர் புதிய யோசனைகளுடன் களமிறங்கியுள்ளனர். மக்களுக்கு வீடுஅமைப்பது, கழிவறை அமைப்பதற்கு உதவிசெய்வது என மக்களிடம் நன்மதிப்பை பெற முயற்சித்து வருகின்றனர். இவ்விதமாக வெகு சாமர்த்தியமாக மக்களின் நன்மதிப்பைப் பெற சிறீலங்கா இராணுவத்தினர் முயற்சித்து வருகின்றனர்.
சிறீலங்கா இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் 60 ஆயிரம் ஏக்கர் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. அவர்கள் ஆக்கிரமித்திருக்கும் காணிகளில் மரங்கள் வெட்டப்படுவதை தான் அறிந்துள்ள போதும் அது யார் தலமையில் நடைபெறுகிறது என தெரியவில்லை எனத் தெரிவித்த முதல்வர்,
மீனவர் பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை, மற்றும் அரசியல் கைதிதகள் பிரச்சினைகள் போன்றவை இன்னும் தீர்கப்படவில்லை எனவும் , வடமாகாணத்திற்கு போதியளவு நிதி ஒதுக்கப்படவில்லை எனவும், கணிசமான பொறுப்புக்களை வடக்கு மாகாணசபை நிறைவேற்றி உள்ளாதாகவும், பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றயமைக்கபடாமை குறித்தும் வடக்கு முதல்வர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here