தீர்­வைப் பெற்­றுத்­தர முடி­யா­த­வர்­கள் பரப்புரைகளில் தவிர்த்து கொள்­ள வேண்­டும் !

0
186


போர் முடி­வுக்கு வந்து எட்டு வரு­டங்­களை கடந்த நிலை­யி­லும் காணா­மல் ஆக்­கப்­பட்ட உறவினர் ­க­ளுக்கு எவ்­வித தீர்­வும் கிடைக்­க­வில்லை. நம்­பிய எங்­க­ளது பிர­தி­நி­தி­க­ளா­லும் எங்களுக்கு ஏமாற்­றம். எங்­க­ளது பிரச்­சி ­னை­க­ளுக்­காக வீதி­யில் இறங்கி போராட்­டத்தை ஆரம் பித்து 315 ஆவது நாளாகவும் இரவு பக­லாக நாங்­கள் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தி­யில் வீதி யில் போராடி வரு­கின்­றோம்.
வடக்கு கிழக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்­கத்­தி­னது தலைவி யோக­ராசா கன­க­ரஞ்­சனி ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும் போதே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைப் பெற்­றுத்­தர முடி­யா­த­வர்­கள் இந்­தப் பிரச்­சி­னையை தேர்­தல் காலங்­க­ளில் பயன்­ப­டுத்­து­வ­தனை தவிர்த்­துக்­கொள்ள வேண்­டும். பயன்­ப­டுத்­து­வதை நாங்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டோம் என கிளி­நொச்சி வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் சங்கத்தின் தலைவி தெரி­வித்­துள்­ளார்.
நாங்­கள் எல்­லோ­ரா­லும் கைவி­டப்­பட்­டுள்­ளோம். இந்த புதிய வரு­டத்­தி­லா­வது எங்­க­ளது விட­யத்­தில் அர­சி­யல் தரப்­பி­னர்­கள் அக்­க­றைச் செலுத்த வேண்­டும். எங்­க­ளது உணர்­வு­களை புரிந்­து­ கொண்டு அர­ச­த­லை­வர், மற்­றும் முத­ல­மைச்­சர் ஆகி­யோர் உரிய பதிலை வழங்க வேண்­டும். அதற்கு தமிழ் தலை­மை­கள் அழுத்­தம் கொடுக்க வேண்­டும்– என்­றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here