கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல தாவரவியல் பூங்கா பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டது!

0
11

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் நாட்டப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர் பலகை அடையாளம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டிருக்கிறது. கரைச்சி பிரதேச சபையினரால் குறித்த விளம்பரப் பலகை நேற்று நாட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவே அது அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டிருக்கிறது.

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை தாவரவியல் பூங்காவாக மாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனினால் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here