மீண்­டும் எழுச்சி பெறும் மாவீ­ரர்­கள் தினம்!

0
1091

2005 ஆம் ஆண்­டின் பின்­னர் யாழ்ப்­பா­ணத்­தி­லும் 2009ஆம் ஆண்­டின் பின்­னர் வடக்கு கிழக்கு முழு­வ­தி­லும் நேற்று முதல் மீண்­டும் மாவீ­ரர் வாரம் பகி­ரங்­க­மாக ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.

கடந்த பல ஆண்­டு­க­ளாக ஆங்­காங்கே இர­க­சி­ய­மாக நடந்து வந்த இத்­த­கைய நிகழ்­வு­கள், போர்க் காலத்­தில் நடந்­த­தைப் போலவே துயி­லும் இல்­லங்­க­ளில் நிகழ்­வு­களை நடத்­து­வது வரை முன்­னே­றி­யி­ருக்­கின்­றது.
போர்க் காலங்­க­ளில் மாவீ­ரர் வார­மும் மாவீ­ரர் தின­மும் பெரும் எழுச்­சி­யு­டன் நடை­பெ­றும். துயி­லும் இல்­லங்­கள் இந்­தக் காலப்­ப­கு­தி­யில் உணர்ச்­சிப் பிழம்­பா­கக் கொழுந்­து­விட்­டெ­ரி­யும்.
மிக நேர்த்­தி­யான திட்­ட­மி­ட­லு­டன் கன கச்சித­மாக நிகழ்த்­த­ப்ப­டும் நிகழ்­வா­க­வும் மாவீ­ரர் வார­மும் மாவீ­ரர் தின­மும் திகழ்ந்­தன. ஒரு துன்­பி­யல் நினைவு நிகழ்­வாக இது இருந்­தா­லும் துயி­லும் இல்­லங்­க­ளுக்கு வெளியே தியா­கத்­தைக் கொண்­டா­டும் திரு­வி­ழாக்­க­ளாக அவை கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருந்­தன.
வீதி­யோ­ரங்­கள் தூய்­மைப்­ப­டுத்­தப்­பட்டு வீதி­கள் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கும். இர­வைப் பக­லாக்­கும் மின் குமிழ்­கள் வண்­ணங்­க­ளை­யும் பாய்ச்சி பகட்­டைப் பறை­சாற்­றும். ஒலி­பெ­ருக்­கி­கள் இடை­வி­டாது தொடர்ந்து விடு­தலை எழுச்­சியை நரம்­பு­க­ளில் ஏற்­றி­ய­படி இருக்­கும் என்று வர்­ணிக்­கக்­கூ­டி­ய­ அளவுக்கு அந்­தக் காட்­சி­கள் இருக்­கும்.
பண்­டைய தமி­ழர்­க­ளின் நடு­கல் வழி­பாட்டை மீட்­டெ­டுக்­கும் பெரு­விழா மாவீ­ரர் தினம் என்று கொண்­டா­டப்­பட்­ட­தும்­கூட நடந்­தது. மரபை மீட்ட மற­வர்­க­ளா­கத் தியாகத்­தின் திரு­வு­ரு ­வங்­க­ளாக நின்­ற­வர்­க­ளும் அவர்­க­ளின் உற­வு­க­ளும் மதிப்­புக்­கு­ரி­ய­வர்­க­ளாக இருந்­தார்­கள்.
இறு­திப் போர் தமி­ழர்­க­ளின் வாழ்­வி­ய­லைச் சிதைத்ததைப் போன்றே, மாவீ­ரர் வாரங்­க­ளை­யும், தினத்­தை­யும், துயி­லு­மில்­லங் க­ளை­யும்,சிதைத்­த­ழித்­தது. அவை கடந்த காலங்­க­ளா­கிப் போயின. அவற்­றைப் பற்­றிப் பேசு­வ­தும், செயற்­ப­டு­வ­தும் பயங்­க­ர­வா­தம் என்­றா­கிப்­போன பயங்­க­ரத்­துக்­குள் தமி­ழர்­கள் வந்து சேர்ந்­தார்­கள்.
அதி­லி­ருந்து சில பல அர­சி­யல் திருப்­பங்­களை ஏற்­ப­டுத்தி இன்று துயி­லும் இல்­லங்­க­ளுக்கு நேரில் சென்று மீண்­டும் நினை­வேந்­தல்­களை நடத்­தக்­கூ­டிய நில­மையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.
கடந்த ஆண்டு அதற்­கான வழி பிறந்­தது. படை­யி­னர் விலகி நிற்க, துயி­லும் இலங்­கள் மீண்­டும் ஒளி­பெற்­றன. இது சாத்­தி­யமா என்ற அச்­சத்­தின் மத்­தி­யில் அவ­சர அவ­ச­ர­மான ஏற்­பா­டு­க­ளு­டன் பெரும் திருப்­ப­மாக மாவீ­ரர் தினம் 2016 நவம்­பர் 27ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் நிகழ்ந்­தே­றி­யது.
அவ­சர ஏற்­பாடு மற்­றும் அச்­சம் கார­ண­மாக அந்த நிகழ்­வு­க­ளின் மையப் புள்­ளி­க­ளாக அர­சி­யல்­வா­தி­களே இருந்­தார்­கள். இது பின்­னர் கடும் விமர்­ச­னங்­க­ளுக்­கும் உள்­ளா­னது.
அதன் பின்­ன­ரான ஓராண்டு காலம் இருந்­த­போ­தும் மாவீ­ரர் வாரம் மற்­றும் தினத்­தைத் திட்­ட­மிட்­டுக் கன கச்­சி­த­மாக நடத்­தக்­கூ­டிய பொதுக் கட்­ட­மைப்பு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வே­யில்லை. அத­னால், இந்த ஆண்­டி­லும் முற்­றி­லும் ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட நிகழ்வு நடப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் குறை­வா­கவே தென்­ப­டு­கின்­றன.
மாவீ­ரர் பணி­ம­னை­யைப் போன்ற ஒரு பொதுக் கட்­ட­மைப்பு இந்த நிகழ்­வு­க­ளைப் பொறுப்­பேற்­காத வரை­யில் மாவீ­ரர்­க­ளின் தியா­கங்­க­ளுக்­குள் அர­சி­யல் புகுந்து விளை­யா­டு­வது தவிர்க்க முடி­யா­த­தா­கி­வி­டும். அது­வே­தான் நடந்­து­கொண்­டும் இருக்­கி­றது.
அந்­தந்த மாவட்­டங்­க­ளில் அல்­லது பகு­தி­க­ளில் உள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளின் நிகழ்­வு­களை நடத்­து­வ­தற்­கென தனித் தனி­யான குழுக்­கள் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. இவற்­றின் பின்­ன­ணி­யில் உள்ளூர் அர­சி­யல் தலை­கள் உள்­ளன என்­பது பர­க­சி­யம்.
இது மேலும் மேலும் மாவீ­ரர் நிகழ்­வு­கள் அர­சி­யல் மயப்­ப­டு­வ­தற்­கும், அர­சி­யல் போட்­டி­களை ஏற்­ப­டுத்­தும் இட­மா­கத் துயி­லு­மில்­லங்­களை மாற்­றி­வி­டு­வ­தற்­கும் வழி­ச­மைத்­து­வி­டக்­கூ­டும். எனவே மாவீ­ரர் நிகழ்­வு­களை நடத்­து­வ­தற்­கான பொதுக் கட்­ட­மைப்பு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யம். இந்­தக் கட்­ட­மைப்­புக்­குள் அர­சி­யல்­வா­தி­கள் இணைந்­தி­ருக்க முடி­யுமே தவிர, அவர்­க­ளின் தலை­மை­யி­லா­ன­தாக அவை இருக்க முடி­யாது.
தனி­நாடு கேட்டு ஆயுத வழி­யில் போராடி மடிந்த மாவீ­ரர்­க­ளின் நிகழ்­வு­களை தனி­நாட்­டுக் கோரிக்­கை­யைக் கைவிட்­டு­விட்­டோம், ஒன்­று­பட்ட பிரிக்க முடி­யாத நாட்­டுக்­குள் தீர்வு என்­பதே எமது நோக்­கம் என்று பகி­ரங்­கப்­ப­டுத்­தக்­கூ­டிய அர­சி­யல்­வா­தி­கள் அல்­லது அத்­த­கைய கட்­ட­மைப்­புக்­குள் வாழத் தயா­ராக இருக்­கும் அர­சி­யல்­வா­தி­கள் தலை­மை­யேற்று நடத்­து­வது என்­ப­தும் அபத்­த­மா­கவே இருக்­கும்.
ஏற்­க­னவே இது தொடர்­பில் ஒரு கோரிக்கை மாவீ­ரர்­க­ளின் பெற்­றோர் சார்­பி­லும் முன்­வைக்­கப்­பட்­டி­ ருந்­தது. இவை எல்­லா­வற்­றை­யும் கவ­னத்­தில் எடுத்து இந்த மாவீ­ரர் தின நிகழ்வை முழு­மை­யாக ஒழுங்­கு­ப­டுத்த முடி­யா­விட்­டா­லும், அடுத்த மாவீ­ரர் தினத்­தை­யா­வது முழுமையாக நடத்த அனை­வ­ரும் முன்­வ­ர­ வேண்­டும்.
தியா­கங்­கள் போற்­றப்­பட­வேண்­டி­ய­வையே தவிர, அவை அர­சி­யல் நலன்­க­ளுக்­கா­க­வும், சுய நலன்­க­ளுக்­கா­க­வும் பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டா­தவை.

உதயன் ஆசிரிய தலையங்கம்(22.11.2017)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here