வடக்கில் வேகமாக பரவும் டெங்கு – நால்வர் பலி; 5ஆயிரம் பேர் பாதிப்பு

0
142


டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நிலையில் நேற்றும் நால்வர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போது டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து காணப்படும் நிலையில் காய்ச்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் இந்த வருடத்தில் 4 ஆயிரத்து 999 பேர் பாதி க்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த எண்ணிக்கை தொகை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கலாம் என யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மழை காலம் இல்லாத நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.
எதிர்வரும் மாதங்கள் மழைகாலமாக இருக்கும் என்பதால் டெங்கு காய்ச்சலின் தாக்கமும் தீவிரமடைந்து பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உண்டு.
குறிப்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த கரையோர கிராம மக்களும் மற்றும் நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை பகுதிகளை சேர்ந்தவர்களாகவே அதிகம் உள்ளனர் எனவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here