தொடங்குகிறது,தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தமிழியல் (B.A) மற்றும் முதுகலைத் தமிழியல் (M.A) பட்டப்படிப்பு.

0
261

*பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தமிழியல் (B.A) மற்றும் முதுகலைத் தமிழியல் (M.A) பட்டப்படிப்பு*

**தமிழியல் பட்டப்படிப்பிற்கான புதிய மாணவர் பதிவும் வரவேற்பு நிகழ்வும்**

    11/02/2024 இளங்கலைத் தமிழியல் (*B.A Tamil* ) பட்டப்படிப்பிற்கான  புதிய மாணவர்கள் பதிவும் வரவேற்பு நிகழ்வும் எதிர் வரும் 11/02/2024 ஞாயிறு பிற்பகல் 13.00 மணிக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தில் இடம்பெறவுள்ளது.  

வளர்தமிழ் 12 கற்று முடித்தவர்களும் தமிழ்ச்சோலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் மற்றும் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் இப்பட்டப்படிப்பை மேற்கொள்ளலாம்.  அன்றைய நாளில் புதிய மாணவர்களுக்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும். மேலும், இவ்வாண்டு *தமிழியல் முதுகலைமாணிப் (M.A. Tamil) பட்டப்படிப்பும் தொடங்கவுள்ளது.*அதற்கான முதற்கட்டப் பதிவுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

அத்துடன், தமிழ் ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் திறனை மேம்படுத்தும் முகமாக *தமிழ் கற்பித்தலில் பட்டயத்திற்கான பதிவுகளையும் மேற்கொள்ளலாம்.*மேலும் குறித்த *நாளில் பட்டம் முடித்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களுக்குமான மதிப்பளிப்பு நிகழ்வும் இடம் பெறும்.*

**தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டச்சான்றிதழ் பிரெஞ்சு அரசால் ஐரோப்பிய மட்டத்திலான பட்ட மேற்படிப்பிற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.** என்பதும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய விளத்தமாகும்.

(Formation reconnue par l’Etat par le biais de l’attestation de comparabilité qui confère le grade de licence( bac+3).

“முற்பதிவு செய்ய விரும்புவோர் இங்கே வருடவும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here