விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு!

0
165

air asiaவிபத்தில் சிக்கி இருக்கலாம் என கருதப்படும் மாயமான ஏயார் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை காலை இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த  ஏயார் ஏசியா பயணிகள் விமானம் 162 பயணிகளுடன் திடீரென மாயமானது. அந்த விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என இந்தோனேசிய அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மூன்றாவது நாளாக மாயமான விமானத்தைத் தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், மாயமான ஏயார் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேலும் இது தொடர்பாக கூறுகையில், ‘கடந்த 13 ஆண்டுகளில் விமான பயணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலையில், தங்களது நிறுவனத்தில் 13 ஆண்டுகளில் 22 கோடி மக்கள் பாதுகாப்பாக விமான பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும், தற்போதும் ஏயார் ஏசியா விமான சேவை மக்கள் பயன்படுத்தி வருவதாகவும், வரும் காலத்தில் விமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here