பிரான்சில் ஆரம்பமான மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் – 2023

0
279

தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு ஆண்டு தோறும் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2023 நேற்று (08.07.2023) சனிக்கிழமை கிறித்தை மைதானத்தில் ஆரம்பமாகியது. தமிழர் வி.கழகம் 95, தமிழர் வி.கழகம் 93, தமிழர்ஸ்தான் வி.கழகம்94, நல்லூர் வி.கழகம், வட்டுக்கோட்டை வி.கழகமான, யாழ்ப்பாண விளையாட்டுக்கழகம், FC 93 விளையாட்டுக்கழகம், அரியாலை ஐக்கிய வி.கழகம் பங்குபற்றியிருந்தனர். கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரர் ஏற்றிவைத்ததுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து போட்டி விதிமுறைகள் போட்டி முகாமையாளர் திரு. இராஜலிங்கம் அவர்களால் தெரியப்படுத்தப்பட்டது . பிரான்சில் நிலவும் கடுமையான வெயிலுக்கு மத்தியிலும் வீரர்கள் உற்சாகமாகப் பங்குபற்றியிருந்தனர்.

தொடர்ந்து இரு தினங்கள் இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here