பிரான்சில் இசைவேள்வி – 2023 போட்டிகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு!

0
559

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தால் 9 ஆவது ஆண்டாக நடாத்தப்படும் இசைவேள்வி கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த 17.06.2023 சனிக்கிழமை 18..06..2023 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியில் மிகச் சிறப்பாக இடம்பெற்று முடிந்த நிலையில் போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் பங்குபற்றிய போட்டியாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு பொண்டிப்பகுதியில் எதிர்வரும் (01.07.2023) சனிக்கிழமை பகல் 13.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

போட்டிகள் முறையே வயலின், மிருதங்கம், குரலிசை தனி, குழு என நடைபெற்ற அனைத்து போட்டிகளும் சிறப்பாக அமைந்திருந்தன. மாணவர்களும், அவர்களின் ஆசிரியர்களும் மிகவும் உற்சாகமாக போட்டிகளில் கலந்துகொண்டிருந்தனர். இம்முறையும் அனைத்துப்போட்டிகளும் பக்கவாத்தியங்கள் சகிதம் நடைபெற்றிருந்தன.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here