பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற ஒள்னே சூ புவா தமிழ்ச்சங்கத்தின் 25 ஆவது ஆண்டு விழா!

0
235

பிரான்சு பாரிசின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஒள்னே சூ புவா தமிழ்ச்சங்கத்தின் 25 ஆவது தமிழ்ச்சோலை ஆண்டு விழா 29.04.2023 சனிக்கிழமை மு.ப.11.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வாக மங்கள வாத்திய நடனத்துடன் விருந்தினர்கள் மண்டபத்திற்குள் அழைத்துவரப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாணவர்களால் தமிழ்ச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது. தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் வரவேற்புரையைத்ஸதொடர்ந்து, வரவேற்பு நடனம் இடம்பெற்று மாணவர்களின் கலைநிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பமாகின.

நடனம் (பள்ளி 2),

அபிநயம் பாடல் (பள்ளி 1),

நாடகம் (பிரஞ்சு மொழியில் – பள்ளி 2 ),

நாடகப் பேச்சு (ஆங்கில மொழியில் -பள்ளி 1),

சிறுவர் பாடல் (பள்ளி 2),

இயலும் இசையும் ‘வாழ்த்துவோம் வாரீர்’ (பள்ளி 1),

வயலினிசை (பள்ளி 2),

நாடகம் ‘மூத்தோர் சொற் கேட்போம்’ (பள்ளி 1),

தாளலயம் ‘முன்னுணர்வு’ (பள்ளி 2),

நடனம் ‘பாரதியார் பாடல்’ (பள்ளி 1 ),

கவியரங்கு (பள்ளி 1),

எழுச்சி நடனம் ‘செந்தமிழ் இனத்தின் கை வாளா’ (பள்ளி 1 ),

உரைநடை ‘ஒள்னே சூ புவா அருங்காட்சியகம்’ (பள்ளி 2),

ஆங்கில பாடல் (பள்ளி 1),

நாடகம் ‘நெற்றிக்கண் திறப்பினும்’ (பள்ளி 2),

தசவதாரம் (பள்ளி 1),

2019, 2021, 2022ம் ஆண்டு சான்றிதழ் வழங்குதல்,

சிறப்புரை ,மதிப்பளித்தல்,

25 ஆவது ஆண்டுமலர் வெளியீடு.

வில்லுப் பாட்டு (பள்ளி 1).

தண்ணுமை (பள்ளி 1), சங்கீதம் (பள்ளி 1),

ஆங்கில நாடகம் ‘Remeo and Juliet’ (பள்ளி 2),

இசையும் கதையும் ‘அழகான ஊர்’ (பள்ளி 1 ),

மேலைத்தேய நடனம் (பள்ளி 2),

கிராமிய நடனம் (பள்ளி 1),

எழுச்சி நடனம் ‘எடுத்து அடிடா’ (பள்ளி 2),

கீர்த்தனம் (பள்ளி 1),

முன்னைநாள் ஆசிரியர்கள், மாணவர்கள்

மதிப்பளித்தல்,

எழுச்சி நடனம் ‘தாயகக் கனவுகள்’ (பள்ளி

2),

விவாத அரங்கு (ஆங்கில மொழியில் பள்ளி 1),

கவிதை ‘அன்னைத் தமிழே’ (பள்ளி 2),

எழுச்சி நடனம் (பள்ளி 1),

வாள் நடனம் ‘பறையிசை முழங்க’ (பள்ளி 2),

ஈழ நாட்டியம் (பள்ளி 1),

எழுச்சி நடனம் ‘என்னோடு ஆடடா’ (பள்ளி 2)

சிறப்புரை

எழுச்சி நடனம் ‘விழ விழ எழுவோம்’ (பள்ளி 1), மதிப்பளித்தல்

என பல நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சிறப்பு உரையை பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். மதிப்பளித்தலுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக அமைந்திருந்தன.

தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு நன்றியுரையுடன் (திருமதி ற.யாமினி ) நிகழ்வு‌ நிறைவுகண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here