பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெற்ற ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
243

ஆனந்தபுர நாயகர்களின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் நேற்று 09.04.2023 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணியளவில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சேர்ஜி தமிழ்ச்சங்கத் தலைவர் சதீஸ்வரன் நிதுசா அவர்கள் ஏற்றிவைக்க
ஆனந்தபுர நாயகர்களுக்கான ஈகைச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதரர் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து 22-07-1998ல் வீரச்சாவடைந்த மாவீரர் 2ம் லெப்டினன் கரிகாலனின் சகோதரர். 01-02-1998ல் வீரச்சாவடைந்த மாவீரர் வீரவேங்கை வேணியின் சகோதரி, 16.06-1990ல் வீரச்சாவடைந்த மாவீரர் மேஜர் விவேகனின் சகோதரர் 04-02-2009ல் வீரச்சாவடைந்த மாவீரர் மேஜர் கிருபனின் சகோதரர், 17-03-2007ல் வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் இளமாறனின் சகோதரி ஆகியோர் ஆனந்தபுர நாயகர்களுக்கான சுடரேற்றிவைத்து மலர்வணக்கம் மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. சேர்ஜி தமிழ்ச்சோலை மாணவ மாணவிகளின் எழுச்சி நடனம், ஆனந்தபுர நாயகர்கள் நினைவுசுமந்த கவிதை, பாடல், பேச்சு மற்றும் , பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பாடகர்களின் எழுச்சி கானங்கள், நினைவுரை மற்றும் சேர்ஜி இளையோர் அமைப்பினரால் வெண்திரையில் பிரெஞ்சு மொழியில் ஆனந்தபுர நாயகர்களின் வரலாற்று உரை என்பன உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தன.

செல்வன் ஹெலன்குமார் பானுகோபன், நிகழ்வினைத் தொகுத்து வழங்கியிருந்தார்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவடைந்தது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here