உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயார்: மக்ரோனிடம் பைடன் உறுதி!

0
144

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர விருப்பம் இருந்தால் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோனுடன் சேர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற பைடன், புட்டின் அதனை இன்னும் செய்யவில்லை என்று வலிறுயுத்தினார்.

ரஷ்யாவின் போருக்கு எதிராக தொடர்ந்து நிற்பதாக இரு தலைவர்களும் இதன்போது தெரிவித்தனர். ஏற்க முடியாத சமரசத்திற்கு உக்ரைனை ஒருபோதும் வலியுறுத்தமாட்டோம் என்று பிரான்ஸ் தலைவர் குறிப்பிட்டார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், உக்ரைனின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உறுதி பூண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ,; உக்ரைனியப் போரைத் தடுத்துநிறுத்தும் வாய்ப்பை மேற்கத்திய நாடுகள் தவறவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்படுவதை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா முன்மொழிந்தது புறக்கணிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்குச் சிறப்புப் பாதுகாப்புத் தகுதி கொடுக்கும்படி ரஷ்யா பரிந்துரைத்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்கத்திய நாடுகள் உக்ரைன் போரில் நேரடியாகப் பங்குவகிப்பதாக லாவ்ரோவ் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்யா தொடர்ந்து தயாராய் இருப்பதாக அவர் கூறினார்.

ரஷ்யாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுடன் கூட்டுச் சதியில் ஈடுபடுவதாகத் லாவ்ரோவ் சொன்னார். அவை ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாய் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here