மட்டக்களப்பு சவுக்கடியில் கிழக்கு பல்கலை. விரிவுரையாளர் சடலமாக மீட்பு!

0
107

மட்டக்களப்பு சவுக்கடி வீதி 80 வீட்டுத்திட்டத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் மட்டக்களப்பு அம்புரோஸ் வீதியை சேர்ந்த ராஜசேகரம் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளராவார்.

குறித்த நபர் அவரது உயர்கல்விக்காக அவுஸ்திரேலியாவில் கல்வி கற்று சில வாரங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்திருந்தார். இவரது மரணத்திற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here