
யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு உந்துருளியின் பின்னால் இருந்து பயணித்த கர்ப்பிணிப்பெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென உந்துருளியில் இருந்து தவறி விழுந்து தரையில் தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 23வயதுடைய பெண் ஒருவரே மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்லும்போது உயிரிழந்துள்ளார்
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.