பலத்த இராணுவப் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டார் மஹிந்தா!

0
76

அவசர சர்வகட்சி மாநாட்டுக்கு
மதத் தலைவர்கள் அழைப்பு
!

ஆர்ப்பாட்டக்காரர்களால் இரவிரவாக
முற்றுகையிடப்பட்டிருந்த அலரி மாளிகை
க்குள் சிக்குண்டிருந்த மஹிந்த ராஜபக்ச
இன்று விடிகாலை அங்கிருந்து பாதுகாப்
பாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய அவர் தொடர்ந்தும் அலரி மாளிகைக்குள்
தங்கியிருந்ததால் ஆர்ப்பாட்டக் காரர்கள்
அதனை முற்றுகையிட்டிருந்தனர். மாளி
கைக்குத் தீ வைக்க முயற்சிக்கப்பட்டதை
அடுத்து நேற்றிரவு காவலர்கள் துப்பாக்
கிச் சூடு நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க நேர்ந்தது.மாளிகையின் பிர
தான நுழைவாயிலை உடைத்து உள்ளே
நுழைந்தசிலர் அங்கு வாகனம் ஒன்றைத்
தீயிட்டு எரித்ததால் அப்பகுதியில் பெரும்
பதற்றம் நிலவியது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ச பதவி
விலகிய தகவல் அரச வர்த்தமானி மூலம்
நேற்றிரவே நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது.

பலத்த இராணுவக் காவலுடன் வெளியே
ற்றப்பட்ட மஹிந்த எங்கே கொண்டுசெல்
லப்பட்டார் என்ற தகவல்கள் தெரியவர
வில்லை. அம்பாந்தோட்டையில் உள்ள
அவரது பரம்பரை இல்லம் உட்பட ராஜ
பக்ச குடும்பத்தினரது வதிவிடங்கள்
பலவும் ஆர்ப்பாட்டக் காரர்களால் தீயிட்டு
எரிக்கப்பட்டுள்ளன. பொதுஜன பெரமுன
கட்சி எம். பிக்கள் மற்றும் அமைச்சர்களு
க்குச் சொந்தமான இல்லங்கள், வாகனங்
கள், சொத்துக்கள் அழிக்கப்படுகின்ற
வீடியோக் காட்சிகள் நேற்றிரவு முழுவதும்
வெளியாகிக் கொண்டிருந்தன.அரச கட்சிப் பிரமுகர்களும் மஹிந்தவின் நெரு
ங்கிய சகாக்களும் குடும்பம் குழந்தை
குட்டிகளுடன் ஏற்கனவே தங்கள் தங்கள்
இருப்பிடங்களில் இருந்து வெளியேறித்
தலைமறைவாகி உள்ளனர் என்று கூறப்
படுகிறது.

இதுவரை நடைபெற்றுள்ள வன்செயல்
களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் குறைந்தது 231 பேர் நாடெங்கும் மருத்துவமனைகளில்
சேர்க்கப்பட்டுள்ளனர். நாடெங்கும் அமு
லில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை
புதன்கிழமை காலை வரை நீடிக்கப்பட்டி
ருக்கிறது.

நாட்டின் நிலைமை மேலும் ரணமாகுவ
தைத் தவிர்ப்பதற்காக அவசர சர்வ கட்சி
மாநாட்டைக் கூட்டுமாறு மதத் தலைவர்
கள் தரப்பில் இருந்து ஜனாதிபதி கோட்
டாபயவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

      -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                         10-05-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here