மலேசியாவின் மேற்கு கடற்பரப்பில் சுமார் 70 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்து;13 பேர் உயிரிழந்தமை உறுதி!

0
139

malaysia_boat[1]மலேசியாவின் மேற்கு கடற்பரப்பில் சுமார் 70 பேர் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மலேசியாவின் செலங்கோர் மாகாணத்தில் சபக் பெர்னம் நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மீட்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்ற போதிலும் 13 பேர் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் 13 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த குடியேறி தொழிலாளர்களை மலேசியாவிலிருந்து இந்தோனேஷியாவிற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சுமார் 20 இலட்சம் இந்தோனேஷியத் தொழிலாளர்கள் மலேசியாவில் இருப்பதாகவும் இவர்களில் பலர் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here