ஐரோப்பிய நாட்டுக் கடைகளில் சூரியகாந்தி எண்ணெய் காலி!

0
205

தானியங்கள், தாவர எண்ணெய்
விலைகள் உலக அளவில் உயர்வு

🔴வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால்
அரசியல் குழப்பங்கள் தோன்றலாம்!

உக்ரைனை உள்ளடக்கிய கருங்கடல் பகுதியை உலகத்தின்”ரொட்டிக் கூடை”
(breadbaskets) என்று வர்ணிப்பதுண்டு.
கோதுமை, சோளம் போன்ற பாண் மற்
றும் ரொட்டிக்கான தேவைகளை நிறைவு
செய்கின்ற உற்பத்திப் பிராந்தியம் அது.
அங்கு வெடித்துள்ள போர் உலக சந்தை
களில் பெரும் அதிர்வலைகளை உருவா
க்கியிருக்கிறது.

சுமார் அறுபது ஆண்டுகளில் உணவுப்
பொருள்களின் விலைகள் உலகளாவிய
ரீதியில் மிக அதிகரிப்பைக் காட்டியிருப்
பதாக உலக உணவு விவசாய நிறுவனம்
தெரிவித்திருக்கிறது.குறிப்பாகப் போரி
னால் சூரியகாந்தி எண்ணெய்க்கான ஏற்றுமதி வழி தடைப்பட்டிருப்பது அதன்
விலையை மட்டுமன்றி மாற்றுத் தாவர
எண்ணெய் வகைகளின் விலைகளை
யும் உயர்த்தியிருக்கிறது.ஐ.நாவின்
உலக உணவு விவசாய நிறுவனத்தின்
உலகளாவிய முக்கிய பொருள்களது
விலைச் சுட்டி கடந்த பெப்ரவரி – மார்ச்
மாதங்களில் 12.6 வீதமாக அதிகரிப்பைக்
காட்டியுள்ளது.

தாவர எண்ணெய் வகைகளின் விலை 23
வீதத்தால் அதிகரித்துள்ள அதேசமயம்
கோதுமை,சோளம் உட்பட தானியங்கள்
17 வீதத்தாலும் சீனி 7வீதமும் இறைச்சி
வகைகள் 5 வீதமும் நாளாந்த பால் பொரு
ள்கள் 3வீதமும் உயர்ந்துள்ளன.அறுவடை
பாதிப்புகள், காலநிலை மாற்றம் காரண
மாக உலக உணவு உற்பத்தி கடந்த பத்து
ஆண்டுகளில் வீழ்ச்சியைச் சந்தித்திருந்
தது. தற்போதைய போர் அதனை மேலும்
பாதித்திருக்கிறது.

உலக சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதி
யில் 70 வீதம் உக்ரைன், ரஷ்யா இரு நாடு
களில் இருந்துமே கிடைப்பதால் போரின்
நேரடியான பாதிப்பு சூரிய காந்தி எண்
ணெயின் விலையை எகிறச் செய்துள்
ளது. பிரான்ஸ், ஜேர்மனி உட்பட ஐரோப்
பிய நாடுகளில் மக்கள் தேவைக்கு அதிக
மாக அதனை வாங்கிச் சேமிப்பதால் எண்
ணெய்குச் செயற்கையான தட்டுப்பாடும்
ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் சூரியகாந்தி எண்ணெய்த்
தேவையின் மூன்றில் ஒரு பகுதியை
உக்ரைனிடம் இருந்து வாங்குகிறது. நாட்
டில் வரும் ஜூன் மாதம் வரை எண்ணெய்
கையிருப்பு உள்ளது என்றும் தேவைக்கு
அதிகமாக வாங்கித் தட்டுப்பாட்டை உரு
வாக்க வேண்டாம் என்றும் அதிகாரிகள்
கேட்டுள்ளனர்.

பல்வேறு அத்தியாவசியப் பொருள்களது
விலை உயர்வால் ஏற்படுகின்ற வாழ்க்
கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பண வீக்கம் என்பவற்றால் உலகின் சில பகுதிகளில் பட்டினி நிலை உருவாக்கக் கூடும் என்றும் அதனால் தோன்றக் கூடிய சமூக அமைதியின்மை இலங்கை
போன்ற அரசியல் குழப்பங்களைப் பிற
நாடுகளிலும் உருவாக்கலாம் என்றும்
பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

       -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
                                               09-04-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here