சனநாயக உரிமையும், வாக்களிக்க வேண்டியதன் அவசியமும்!

0
297
ஒவ்வொரு நாட்டின் குடிமகனின் மிகப்பெரும் சனநாயக உரிமையும் அதன் பயனும் பலமும் தான் வாக்களிக்கும் உரிமையாகும். அதனை தவறவிடாது தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். இது எதிர்காலத்தில் பெரும் பலனை இங்கு வாழும் எம்மின மக்களுக்கு பெற்றுத்தரும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
10 ம் நாள் வரப்போகும் பிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல் கடும்போட்டியாக வலது சரிக்கட்சிகளும், இடது சாரியக் கொள்கைகளை கொண்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. களத்தில் பிரெஞ்சு மக்களிடையே தொடர்ந்தும் மக்கள் பணியில் நின்றவர்கள் போட்டிகளில் பங்கு கொள்வதால் மக்களின் வாக்குகள் மிகப்பெரும் ஆயுதமாக பார்க்கப்படுகின்றது. நாளுக்குக்கு நாள் தேர்தல் பிரச்சாரம் காரசாரமாக போய்கொண்டிருப்பதும் வெளிநாட்டவர்கள் விடயத்தில், அகதிகள் விடயத்தில், பொருளாதார விடயத்தில் விவாதங்கள் நடைபெறுவதும் இந்த விடயத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒரேமாதிரியான கொள்கையை கொண்டதாக இருக்கின்ற நிலையில், பிரான்சு மண்ணில் நான்கு தாசாப்தங்களாக வாழும் ஈழத்தமிழ் மக்கள் அவர்களின் பிள்ளைகள் என பல்லாயிரம் பேர் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் இத்தேர்தல்களில் வாக்களிக்க தகுதியுடைய தமிழ் மக்களின் உரிமம் பெருகிக்கொண்டே வருகின்றது. ஆனால் வேதனையான விடயம் என்னவென்றால் பலர் இந்த தேர்தல்களில் வாக்களிக்கும் விருப்பத்தையும், நாட்டத்தையும் பெரிதாகக் கொண்டிருக்கவில்லை என்பதே! இந்த விடயம் வாக்களிக்கும் நிலையத்தில் பெற்றுக்கொள்ளும் பதிவின் மூலமும் ஊடகங்கள் எடுக்கும் கணிப்பின் மூலமாகவும் அறியக்கூடியதாக இருப்பதும், இதனை ஈடுசெய்ய பல கட்சிகள் தமிழ்மக்களையும், அதன் அரசியல் கட்டமைப்புக்களையும் அணுகுவதையும் இன்று காணக்கூடிய நிலையில் அதனை எவ்வளவு தூரம் தமிழர் தமக்கு தேவையானதையும், அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள தூரநோக்குடன் செயற்படுத்தப் போகின்றார்கள் என்பதே!
தமிழர்கள் நாம் விரும்பியோ, விரும்பவில்லையோ வாக்களிக்க வேண்டியவர்களாகவே உள்ளனர். பிரெஞ்சு மக்கள் மத்தியில் பலவருடகாலம் பணியாற்றி வரும் தலைவர்கள், முக்கியம் வாய்ந்தவர்கள் பங்பற்றும் இத்தேர்தலில் 10 ஏப்பிரல் நடைபெறும் முதற்கட்டத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கபடுகின்றது. எனவே இதுவரை தேர்தலிலும், வாக்களிப்பிலும் நல்ல தலைவனை தெரிவுசெய்யும் பொறுப்பில் எமது மக்களும் பங்குகொள்கின்றனர் என்பதை மறக்காது வாக்காளத் தமிழ் மக்களும், இளையவர்களும், நண்பர்களும், சமூகப்பணியாளர்களும் தாம் வாக்களிப்பதுடன், மற்றவர்களையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். வாழும் நாட்டில் இதுவும் காலத்திற்கு தேவையானதொரு விடயமாகப் பார்ப்போமாக
– நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here