தடுப்பூசி அட்டைக்கு எதிராக பிரான்ஸ் பாரிஸ் நகரில் கடும் போராட்டம்!

0
396

தடுப்பூசி அட்டைக்கு எதிரான பலர் இன்று சனிக்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“CONVOIS DE LA LIBERTÉ” என அழைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ள போதும், தடையை மீறி இன்று காலை அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Porte de Champerret, Porte Maillot மற்றும் Porte de Saint-Cloud போன்ற பகுதியில் பல நூறு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வீதியை முடக்கினார்கள். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக வீதி போக்குவரத்து கண்காணிப்பாளர்களான Sytadin நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு குற்றப்பணமும் அறவிடப்பட்டது. காலை 10 மணிவரை 201 பேருக்கு குற்றப்பணம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3,300 வாகனங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை முடக்கியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறையும், €4,500 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here