பிரான்ஸ்: சுகாதார நிர்வாக முறைகளை எதிர்த்து ஆசிரியர்கள் பணி நிறுத்தம்!

0
117


இன்று பாடசாலைகள் செயலிழக்கும்!

பாடசாலைகளில் அரசு நடைமுறைப்
படுத்திவருகின்ற கொரோனா சுகா
தார விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து
ஆசிரியர் சங்கங்கள் இன்று பணிப்
புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்துள்
ளன.நாட்டின் மிகப் பெரிய பெற்றோர்கள்
சம்மேளனமும் அதற்கு ஆதரவு தெரிவித்
திருக்கிறது.

இதனால் நாடெங்கும் பாடசாலைகள்,
கல்லூரிகள் செயலிழக்கும் என எதிர்
பார்க்கப்படுகிறது.மாணவரை இன்று
பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று
ஆசிரியர்கள் தரப்பில் கோரப்பட்டிருக்
கிறது. டெல்ரா, ஒமெக்ரோன் திரிபுகள்
ஏற்படுத்திய மோசமான தொற்றலையை
நாடு எதிர்கொண்டுள்ள சமயத்தில்-
குறிப்பாகச் சிறுவர்கள் அதிக எண்ணிக்
கையில் தொற்றுக்குள்ளாகியிருக்கின்ற
சூழ்நிலையில்-ஆசிரியர்களின் பணிப்
புறக்கணிப்பு இடம்பெறுகிறது.

ஜனவரியில் பாடசாலைகள் தொடங்கி
யது முதல் கல்வி அமைச்சு பள்ளிகளில் பேணவேண்டிய சுகாதார விதிகளை
மூன்று தடவைகள் மாற்றியுள்ளது. ஒமெக்ரோன் வைரஸ் மிக வேகமாகப்
பாடசாலைகளில் தொற்றுவதால் தனி
மைப்படுத்தல், வகுப்புகளை மூடுதல்
பரிசோதிப்பு என்று பல்வேறு நெருக்கடி
களைப் பள்ளி நிர்வாகங்களும் பெற்றோ
ரும் எதிர்கொண்டுள்ளனர்.

பதின்ம வயது மாணவர்கள் உட்பட பாட
சாலைகளில் தொற்றுக்குள்ளானவர்க
ளது தொகை கடந்த வாரம் 5 வீதமாகக்
காணப்பட்டது.

பாடசாலைகளைத் தொற்றில் இருந்து
பாதுகாப்பதற்கு உயர் தரம் வாய்ந்த
மாஸ்க்குகள் வழங்கப்படவேண்டும் என்
றும் வகுப்பறைகளில் காற்றோட்டத்தை
சீராக்கும் கருவிகள் (carbon-dioxide detectors) பொருத்தப்பட வேண்டும் என்
றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து
வருகின்றனர். ஒன்றில் பாடசாலைகளை
மூடுங்கள் அல்லது நேர்த்தியான சுகாதா
ரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுங்
கள் என்று தொழிற்சங்கங்கள் போர்க்
கொடி தூக்கியிருப்பதால் கல்வி அமைச்
சர் மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

முந்திய தொற்றலைகளின் போது கடைப்
பிடித்த விதிகளை ஒமெக்ரோன் வைரஸ்
தொற்றைத் தடுப்பதற்கு அப்படியே நடை
முறைப்படுத்த முடியாது.அது எதிர்பாராத
விதமான பெரும் வேகத்தில் பரவுகின்
றது. மாணவர்கள் வகுப்பில் இருந்தாலும்
வெளியே இருந்தாலும் தொற்றுக்குள்ளா
கின்ற நிலை காணப்படுகிறது என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
13-01-2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here