தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நாள் இன்று!

0
369

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 12.10.1986 அன்றைய நாள் #வரலாற்று #முக்கியத்துவம்_நிறைந்த நிகழ்வுகளுக்கான நாளாகும்.

*⚅ விடுதலைப் போராட்ட வரலாற்றில் #முதலாவதுலெப்ரினன்ட்கேணல் வீரச்சாவு.

12.10.1986 அன்று மன்னார் அடம்பன் பகுதிக்கு முன்னேறி வந்த சிங்களப் படையணியொன்றை முற்றுகையிட்டு தாக்கியழித்த விடுதலைப் புலிகளின் வெற்றிகரமான தாக்குதலில், லெப்ரினன்ட் கேணல் #விக்ரர் என்ற எங்கள் #சாதனைத்_தளபதி வரலாறு படைத்து வீரச்சாவடைந்தார்.

*⚅ முதன்முதலாக லெப்ரினன்ட் கேணல் விக்ரரின் வித்துடல் தான் மக்களின் வணக்க நிகழ்வுக்கென கிராமங்கள், நகரங்கள் என எடுத்து வரப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வழியனுப்புதலுடன் இறுதி நிகழ்வு நடைபெற்றமை வரலாறாகியது.

*⚅ இத்தாக்குதலிலேயே முதன்முதலாக #விடுதலைப்புலிகளின் #மகளிர் #படையணி, சிங்களப் படைக்கு எதிரான தாக்குதலில் #நேரடியாகஈடுபட்ட #வரலாற்றுநிகழ்வுநடந்தேறியது. இவ்வரலாற்று நிகழ்வும் மன்னார் பிராந்திய தளபதி லெப்ரினன்ட் கேணல் விக்ரர் அவர்களின் வழிநடாத்தலிலேயே நடந்தேறியது.

*⚅ முதன்முதலாக சண்டைக் களத்தில் #சிங்களபடையாட்கள் #உயிருடன் #சிறைப்பிடிக்கப்பட்டமையும், சிங்களப் படைகளின் உடல்கள் கைப்பற்றப் பட்டமையும் இத்தாக்குதலிலேயே நிகழ்ந்திருந்தது.

2வது லெப். அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார என்ற இரு சிங்கள படை அதிகாரிகளே சிறைப் பிடிக்கப்பட்டனர்.

விக்ரர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில் கூட அவன் இன்னொரு #அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு #பாரிய_எழுச்சியையும் சிங்களப் படையாட்கள் கைதுகள் மூலம் உருவாக்கியிருந்தான்.

*⚅ சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் #வரலாற்றுச்சிறப்புமிக்க ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்ரர் அவர்களின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.

*⚅ விக்ரர் அவர்களின் காலத்தில் விடுதலைப் புலிகளின் #மன்னார்படையணி என்ற பெயரை கேட்டாலே சிங்களப் படைகள் கதிகலங்கி நிற்பதும், சிங்களப் படைகளுக்கு #சிம்மசொப்பனமாக விக்ரர் விளங்கியமையும் நமது பெருமைக்குரிய வரலாறாகும்.

இவ்வாறாக பல வரலாற்று சாதனைகளை நிலைநாட்டிய #எங்கள்சாதனைத்தளபதி #லெப்ரினன்ட்கேணல்விக்ரர் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here