
மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமை தமிழ்த் தேசிய துக்க தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ’பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை’ மக்கள் பேரெழுச்சி இயக்கம், வடக்கு- கிழக்கு சிவில் சமூக சம்மேளனம், வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, மட்டக்களப்பு பல் சமயங்களின் ஒன்றியம், முதியோர் சம்மேளனம் மட்டக்களப்பு, மட்டக்களப்பு வெண்மயில் அமைப்பு, மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன், மட்டக்களப்பு சடோ லங்கா நிறுவனம், அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம், மட்டக்களப்பு தமிழர் நலன் காப்பகம், யாழ். சிவகுரு ஆதீனம், மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, திருகோணமலை புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, உலக தமிழர் மாணவர் ஒன்றியம், திருகோணமலை இராவண சேனை, யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மற்றும் தமிழ் தேசிய அரசியல் தலைவர்கள் இணைந்து இதனை அறிவித்துள்ளன.