பிரான்சில் தமிழின அழிப்புக்கு நீதிகோரிய வாகன சுலோக கவனயீர்ப்புப் போராட்டம்!

0
990

பிரான்சில் சனநாய அரசியல் ரீதியான பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் லாச்சப்பல் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தையும், கடந்த 14 ஆம் திகதி முதல் வாகனத்தில் தமிழினப் படுகொலை நீதி வேண்டும் என்றும் பிரித்தானியாவில் உண்ணாமறுப்புப் போராட்டத்தை நடாத்திவரும் அம்பிகை அவர்களின் கோரிக்கைகளையும் போராட்டத்தையும் பிரெஞ்சு மற்று வெளிநாட்டு மக்களுக்கு காட்சிப்படுத்தலுடன் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற நோக்கோடு இரண்டு பெரிய ஊர்தியில் சிறீலங்காவில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழ் மகக்கள் சுலோகங்களைக் கட்டி பாரிசின் மிக முக்கிய இடங்களில் இளையோர்கள் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 2 இலட்சம் வெளிநாட்டு மக்கள் வந்து பார்வையிடும் பாரிசின் முக்கிய இடங்கள் வழியாக தொடர்ச்சியாக தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். துண்டுப்பிரசுரங்கள் வழங்குவதோடு மின்னஞ்சல் முலம் போராட்டத்திற்கு ஆதரவை நல்கும் வண்ணம் இந்த இளையவர்கள் தேவையான வழியில் உரிய முறையில் சனநாயக வழியில் தமது பணியை ஆற்றி வருகின்றனர். பிரித்தானியாவில் உண்ணாமறுப்புப் போராட்டத்தை நடாத்தி வரும் செய்தியையும், சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு சிறீலங்கா அரசைக் கொண்டு வரவேண்டும் எனக்கோரி பிரெஞ்சுப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரெஞ்சு மாநகர முதல்வர்கள் என்பவர்களுக்கு பல நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் இவர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பல் வேறு சந்திப்புக்கள் அரசியல் மட்டங்களில் நடாத்தி வருகின்றனர். தமிழர் நியாயத்திற்காக பிரெஞ்சு அரசியல் வாதிகளின் ஆதரவுத் தீர்மானங்களுக்கும் பின்புலமாக இருந்து வருகின்றனர்.
இன்றைய இளையவர்கள் தமது தாய்நாட்டையும், மொழியையும் கலை பண்பாடு விளையாட்டு என்பவற்றை நேசித்தாலும் தாய்மண்ணில் சிங்களபௌத்த தேசம் அவற்றை கபளீகரம் செய்கின்ற போது தொடர்ந்து தமிழின அழிப்பை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் நடாத்திக் கொண்டிருக்கையில் எமது மக்களுக்கு நீதிவேண்டும் என்று எம்மை அழிப்பவனிடம் போய் நாம் எவ்வாறு நிற்பது என்பதே இவர்களின் கேள்வியாகவும் உள்ளது.
தமிழீழ மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் இழந்து போன பறிக்கப்பட்ட தாய்நிலத்தை அரசியல் பாதையில் பெற்றுத்தரவேண்டியது சர்வதேசத்தின் மிகப்பெரும் கடப்பாடு என்பதுதான் இன்றைய இளையவர்களின் எண்ணப்பாடாகவும் செயற்பாடாகவும் இருக்கின்றது. அவர்களின் கோரிக்கை நியாயமானது அவர்கள் அறிவு பூர்வமாக , பூகோள அரசியலில் சிக்குப்படாது கடந்து வந்த பாதைகளின் முட்டுக்கட்டைகளைத் தெரிந்து கொண்டும் அவற்றை படிப்பினையாக்கி நிதானமாக கடக்கின்றனர்;. பிரான்சில் மட்டுமல் உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் இளையவர்கள் தாம் விருப்புடன் கற்றுவரும் அரசியல் விஞ்ஞானத்தின், சர்வதேசத்தின் சட்டத்தின் உடாக ஒன்றாக இணைந்து விரைவில் புதுயுகத்தைப் படைப்பார்கள் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் வருகின்றது. அவர்களுக்கு வழிகாட்டியாய் பக்கபலமாய் இருக்க வேண்டியது அனைத்து தமிழ்ப்பேசும் தமிழ் மக்களின் தலையாய கடமையுமாகும்.  இதனைத்தான் இன்றைய காலம் எமது கைகளில் தந்திருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here