பிரான்சு தமிழ் இளையோரின் “கனவுகள் நோக்கிய பயணம்” நிகழ்வு!

0
461

அன்புடையீர் வணக்கம்,
எதிர்வரும் 20 (9h-13h)மற்றும் 21/03/2021 (9h30-12h30) ‘கனவுகள் நோக்கிய பயணம்’ என்னும் தலைப்பில் ஓர் நிகழ்வை, தமிழ் இளையோர் அமைப்பு , மற்றும் Colombes இளையோர் சங்கம் இணைந்து நடாத்தவுள்ளார்கள் என்பதை அறியத்தருகிறோம்.
4ème வகுப்பிலிருந்து 3ème வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சனிக்கிழமை (20/03/2021) மற்றும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை 21/03/2021), தங்கள் எதிர்கால கல்வி திட்டங்களுக்கான ஆலோசனைகள் வழங்கும் நோக்கத்திற்காக இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வு இணையத்தில் ‘ZOOM ‘ இல் நடைபெறும் . கல்வி கற்று, பல துறைகளில் பணியாற்றிவரும் இளையோர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கான ஆலோசனைகள் வழங்கவுள்ளார்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், இந்த link மூலம் பதிவு செய்ய முடியும் :
https://cutt.ly/ckuGJui
கலந்து கொள்ளும் மாணவர் எண்ணிக்கை 40 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here