வவுனியா செட்டிக்குளத்தில் தொடருந்துமோதி ஒருவர் பலி!

0
199

வவுனியா – செட்டிக்குளம், துடரிக்குளம் பகுதியில் இன்று (01.07.2020) காலை முச்சக்கர வண்டியுடன் தொடருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

தொடருந்து கடவையினை கடக்க முற்பட்ட முச்சக்கர வண்டியினை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து மோதித்தள்ளியதில் முச்சக்கரவண்டியின் சாரதி (58-வயது) சம்பவ இடத்திலேயே பலியானார்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here