பிரான்சு அதிபர் நாளை மக்களுக்கு மூன்றாவது அவசரகால உரை!

0
1712

பிரான்சு அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீண்டும் நாட்டு மக்களுக்காக நாளை விசேட உரையாற்ற உள்ளார். 

பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,328 ஆக உள்ளது. உள்ளிருப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்து மூன்று வாரங்கள் கடந்து நான்காவது வாரத்தில் உள்ளோம். இந்த நடவடிக்கை மேலும் நீடிக்கப்படுவதுடன், முன்பை விட மேலும் இறுக்கமாக்கப்படுகின்றது.

இந்த முக்கிய தருணத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாளை (வியாழக்கிழமை) இரவு மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றுகின்றார். 

இரவு 8 மணிக்கு இவர் நாட்டு மக்களுக்காக உரையாற்ற உள்ளார். கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்ததில் இருந்து மக்ரோன் மேற்கொள்ளும் மூன்றாவது உரை இதுவாகும். ஜனாதிபதியின் உரையை பிரான்சு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஜனாதிபதியின் கடந்த இரண்டு அவசரகால உரைகளும் ஒரே நேரத்தில் அதிகமான மக்கள் பார்வையிட்ட வரலாற்றுப் பதிவாக இருக்கின்ற நிலையில் மூன்றாவது உரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here