யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

0
528

mainpic_Lயாழ். நகருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் மற்றும் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் ஆகியோர் யாழ். நீதிமன்ற கட்டட தொகுதியை நேற்று பார்வையிட்டனர்.

புங்குடுதீவு மாணவியின் நீதிமன்ற விசாரணைகளின்போது பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டம் செய்ததும், நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட விடயம் தொடர்பாகவும் நீதிமன்ற கட்டடத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாகவும் அவர்கள் நேரில் கண்டறிந்தனர்.

புங்குடுதீவு மாணவியின் படு கொலை யுடன் தொடர்புடைய சந்தேக நபர்களும் கடும் தண்டனை வழங்க வேண்டும். பிணை வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியே இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனவே இவர்கள் நடத்திய தாக்குதலில் நீதிமன்ற கட்டடத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளமையையும் பொலிஸ் மா அதிபருக்கும் பிரதம நீதியரசருக்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ். நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதிகளவு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பாகவும் பிரதம நீதியரசர் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் நீதிவான்களு க்குரிய பாதுகாப்பும் மேலும் பலப் படுத்தப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் மற்றும் பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன் ஆகியோருடன், யாழ் உயர் நீதிமன்ற நீதிபதிகளான திருமதி கனகா சிவபாத சுந்தரம், மக்கி மொஹமட் (சிவில்), மாவட்ட நீதிபதி கஜ நீதிபாலன், யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ. சிவகுமார் யாழ். சட்டத் தரணிகள் சங்க தலைவி ஜனாதிபதி சட்டத் தரணி சாந்தா அபிமான சிங்கம் ஆகி யோரும் கலந்துகொண்டனர். தாக்குதல் சம்பவத்தினால் அச்சமடைந்துள்ள நீதிமன்ற

ஊழியர்களையும் அவர் சந்தித்து அவர்களுக்கும் நம்பிக்கையூட்டினார். அத்துடன் சேதங்களை உடனடியாக திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதி அமைச்சுடன் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here