வடக்கில் சோதனைச் சாவடிகள் அதிகரிப்பு: மக்களை புகைப்படம் எடுக்கும் சிறிலங்கா இராணுவம்!

0
414

வடக்கு மாகாணத்தில் பல இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுவரும் நிலையில், சோதனைச் சாவடிகளில் மக்களை சிறிலங்கா இராணுவம் பு கைப்படம் பிடிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் (A-9) பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், பயணிகள் பேருந்துகள் தொடக்கம் தனியாா் வாகனங்கள் வரை சகல வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படுவதுடன், மக்கள் வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்பட்டு
சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. இதன்போது சோதனைக்குட்படுத்தப்படும் மக்களை இராணுவத்தினா் புகைப்படம் எடுப்பதாக மக்கள் கூறுகின்றனா். இன்று அதிகாலை ஓமந்தை மத்திய கல்லுாாிக்கு முன்பாகவுள்ள சோதனைச் சாவடியில்,
பொதுமக்களை இராணுவம் புகைப்படம் எடுத்ததாக மக்கள் கூறுகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here