ஈழப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வரும் திங்கட்கிழமை மே,பதினெட்டாம் திகதியன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று தசாப்த கால விடுதலைப்போரில் நாம் கொடுத்த விலைகள் எராளம்.இலட்சக்கணக்கான உறவுகளின் உயிர்களை இழந்திருக்கின்றோம்.இதன் உச்சக் கட்டமாக இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி அன்று முள்ளிவாய்க்கலில் திட்டமிடப்பட்ட இனப்படு கொலை அரங்கேற்றப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் எமது ரணங்கள் மாறவில்லை.இவ் விடயத்தில் சர்வதேச சமூகம் எம் மக்களின் உரிமைக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்தியுமான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டிலும் தடைகளினை தாண்டி பல்கலைக்கழக சமூகம் நினைவேந்தல்களினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.