இயற்கையைப் பாதுகாக்க வலியுறுத்தி கிளிநொச்சியில் விழிப்புணர்வுப் பேரணி!

0
272

இயற்கை வளத்தைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி – பரந்தன் விவசாயக் கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வுப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமேஸன் மழைக்காட்டில் தீ பரவி வருவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களைத் தௌிவூட்டும் வகையில் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரடிப்போக்கு சந்தியிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி A – 9 வழியாக டிப்போ சந்தியில் உள்ள பசுமைப்பூங்கா வரை சென்றடைந்தது.

பேரணியில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.

பேரணியில் விவசாயக் கல்லூரி மாணவர்கள், மருதனார் மடம் விவசாயக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here