கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீதிக் சமிக்கை விளக்குகள் முறையாக ஒளிர ஆரம்பிக்கும் முன்னான காலையில் கைதடியிலிருந்து உரும்பிராய் நோக்கிய வீதியில் வந்த டிப்பருடன் பருத்தித்துறை வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த உந்துருளி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
மறைகாணிக் காட்சிகளில் உந்துருளியை செலுத்தி வந்தவர் மிக வேகமாக வந்ததுடன் உந்துருளியை கட்டுப்படுத்த முடியாமல் மோதியிருப்பது தெரியவருகிறது. அத்துடன் நீண்ட நேரமாகியும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வராததினால் சந்தியில் விபத்து ஏற்படுத்திய வாகனங்கள் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.